சிற்றுண்டி வகைகள்

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கறுப்பு எள்ளு – 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பூண்டு பற்கள் – 2
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு

செய்முறை :

* எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் போட்டு, வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

* அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மேலும் ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.

* பின்னர் எல்லாம் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் போதும். கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

* எலுமிச்சம் சாதம் / தேங்காய் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். 201605090910578877 How to make nutritious sesame thuvaiyal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button