30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சிற்றுண்டி வகைகள்

மனோஹரம்

என்னென்ன தேவை?

அரிசி மாவு – 2 கப்,
பயத்தமாவு – 1 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – பிசைவதற்குத் தேவையானது.

பாகிற்கு…

வெல்லம் – 1/4 கிலோ,
தண்ணீர் – 1 கப்.


எப்படிச் செய்வது?

அரிசி மாவு, பயத்தம் மாவு, நெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் காயவைத்து பிசைந்த மாவை பெரிய (அ) சின்ன ஓட்டை இருக்கும் முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, ஆறியதும் பெரிய துண்டுகளாக உடைக்கவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்தால் போதும். பாகு முத்தக் கூடாது. பாகு வாசனை வந்து, பொங்கிக் கொதித்தவுடன் கீழே இறக்கிவைத்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உடைத்த முறுக்கு துண்டுகளைப் போட்டு, அதன் மேலே பாகை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

Related posts

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

டபுள் டெக்கர் பரோட்டா

nathan

பொங்கல் ஸ்பெஷல்: காரைக்குடி சாமை பொங்கல்

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

nathan

கோயில் வடை

nathan

சிவப்பு அரிசி கொழுக்கட்டை

nathan

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan