30.4 C
Chennai
Friday, Sep 11, 2026
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

வெண்பொங்கல்

images (23)பச்சரிசி & இரண்டு ஆழாக்கு பயத்தம் பருப்பு & 3/4 ஆழாக்கு நெய் & ஒரு சிறிய பாயசக் கிண்ணம் அளவு முந்திரி & பத்து இஞ்சி & ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை & கொஞ்சம் உப்பு & தேவையான அளவு (1 1/2 தேக்கரண்டி) மிளகு சீரகம் & 1 தேக்கரண்டி
பச்சரிசியையும் பயத்தம் பருப்பையும் ஒன்றாகப் போட்டு, தண்ணீர் விட்டுக் களையவும். பிறகு ஏழு ஆழாக்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்ததும் முந்திரியை ஒடித்துப் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு வாணலியில் மிளகு, சீரகத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி, அதையும் தனியாக வறுக்கவும். மிளகு, சீரகத்தை பொடி செய்து கொள்ளவும். குக்கரில் வெந்திருக்கும் அரிசி, பருப்பு கலவையை வாணலியில் போடவும். (அடுப்பில் வைக்க வேண்டாம்) அத்துடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், நெய், கருவேப்பிலை, முந்திரி எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்..

Related posts

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

nathan

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்

nathan

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

nathan

பேரிச்சம்பழ கேக்

nathan

ருசியான அனார்கலி சாலட்!…

sangika