201705081051101700 how to make oats curd bath SECVPF
ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் சிறந்தது. இன்று ஓட்ஸ் வைத்து சத்தான தயிர் பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 200 கிராம்
புளிக்காத தயிர் – 200 கிராம்
கேரட் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 சிறுதுண்டு
கறிவேப்பிலை – 7
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* அடுத்து அதில் துருவிய கேரட்டை போட்டு வதக்கவும்.

* பின் அதில் தயிர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைக்கவும்.

* அடுத்து அதில் ஓட்ஸ் சேர்த்து கலந்து 5 நிமிடம் நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் ரெடி!!!201705081051101700 how to make oats curd bath SECVPF

Related posts

பூசணி விதையின் நன்மைகள் (Poosani Vithai Benefits in Tamil)

nathan

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan

நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா? அய்யய்யோ அப்படின்னா இதை படிங்க

nathan

ஏன் உங்கள் வியர்வை அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகத்தை எளிமையாக சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இதை சாப்பிட்டா அ முதல் ஃ வரை எல்லா நோயும் பறந்து போயிடும்…

nathan

குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்கும் இந்த பொடி பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கிராம்பின் மருத்துவ நன்மைகள்?

nathan

பெண்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடணுமாம்…

nathan