என்னென்ன தேவை?
பச்சரிசி – 1 கப்,
பால் – 1 லிட்டர்,
பொடித்த கல்கண்டு – 2 கப்,
நெய் – 1/2 கப்,
முந்திரி – 10,
திராட்சை – 15,
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பச்சரிசியுடன் பால், 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில், குக்கரில் குழைய வேக வைக்கவும். வெந்ததும் பொடித்த கல்கண்டை சாதத்தோடு சேர்த்துக் கிளறவும். கல்கண்டு கரைந்து, சாதத்தோடு நன்றாகக் கலந்ததும் இறக்கவும். கடாயில் பாதியளவு நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து சாதத்தில் கொட்டவும். மீதியுள்ளநெய், ஏலக்காய்தூள், குங்குமப்பூ அனைத்தையும் கல்கண்டு சாதத்தில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.