30.1 C
Chennai
Tuesday, Jul 14, 2026
சைவம்

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் ஆகியவற்றை விரட்ட, இந்த மிளகு குழம்பு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:

புளி – 1 சிறிய எலுமிச்சம் ப்ழ அலவு
மிளகு – 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 3 அல்லது 4
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
உப்பு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

புளியைக் கரைத்து இரண்டு டம்ளர் அளவுக்கு புளிக் கரைசல் எடுத்து கொள்ளவும்.

கருவேப்பில்லை, துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் இவற்றை எண்ணெயில் வறுத்து கொள்ளவேண்டும்.

வறுத்து ஆற வைத்த பொருட்களை நன்கு அரைத்துகொண்டு, புளி தண்ணீரில் உப்பு சேர்த்து அரைத்தபுளி சிறிது சுண்டும் வரைக் கொதிக்க விட்டு இறக்கிவைத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். சுவையான மிளகுக் குழம்பு தயார்.

Related posts

தர்பூசணிக் கூட்டு

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

தேங்காய் சாதம்

nathan

தேங்காய்ப்பால் பேபி கார்ன் புலாவ்

nathan

கொண்டைக்கடலை மசாலா…

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா

nathan

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan