36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
பச்சரிசி – 1 ஆழாக்கு
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 15
நெய் – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்புத்தூள் – தேவையான அளவு

செய்முறை :

* பச்சரிசியை நன்றாக அலசி சுத்தம் செய்து போதுமான அளவு தண்ணீர் விட்டு உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

* கறிவேப்பிலையை உருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும் உருவி வைத்திருக்கும் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

* வாணலியில் போதுமான அளவு நெய்யை விட்டு கடுகு, உ.பருப்பு போட்டு தாளித்து முந்திரிப் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்கவும்.

* இவற்றை உதிரியாகப் பரப்பி வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

* சத்தான கறிவேப்பிலை சாதம் ரெடி.

Related posts

வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

நார்த்தங்காய் சாதம்

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan

பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan