சைவம்

பூண்டு – மிளகுக் குழம்பு

தேவையான பொருட்கள்:

உரித்த பூண்டு – ஒரு கிண்ணம்,

தனியா – 3 டேபிள் ஸ்பூன்,

மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4,

உளுத்தம் பருப்பு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,

புளி – சிறிய உருண்டை,

உப்பு – தேவையான அளவு,

நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:

• புளியை கரைத்து கொள்ளவும்.

• கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறிய பின்னர் மிக்ஸியில் பொடிக்கவும்.

• சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.

• கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வதக்கவும்.

• அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.

• மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

• சுவையான சத்தான பூண்டு – மிளகுக்குழம்பு ரெடி. சளி தொல்லை இருப்பவர்கள் இதை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம்.

Related posts

பொங்கல் அன்று செய்யப்படும் மஞ்சள் பூசணி மொச்சை பொரியல்

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

nathan

பூண்டு நூடுல்ஸ்

nathan

உருளைகிழங்கு ரய்தா

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan