30.3 C
Chennai
Tuesday, Jul 14, 2026
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து செய்யும் இந்த சாலட்டை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட உகந்தது. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 50 கிராம்
முளைகட்டிய பச்சைப் பயறு – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லித்தழை – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விட்டு வேக வைத்து கொள்ளவும்.

* முளைகட்டிய பச்சைப் பயறை வேக வைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.

* சத்து நிறைந்த வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் ரெடி.

Related posts

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan

காரா ஓமப்பொடி

nathan

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan

சொதி

nathan

சத்தான கம்பு – காலிபிளவர் அடை

nathan

கொத்து ரொட்டி

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan

பலாப்பழ தோசை

nathan

மிரியாலு பப்பு

nathan