சிற்றுண்டி வகைகள்

கேரளா உன்னி அப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 250 கிராம்,
வெல்லம் – 250 கிராம்,
வாழைப்பழம் – 3,
சின்னச் சின்னதுண்டுகளாக நறுக்கிய தேங்காய் – 1/4 கப்,
நெய் – 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். ஊறவைத்துள்ள அரிசியையும், வெல்லக் கரைசல், வாழைப்பழம், தேங்காய்த்துருவல் இதனுடன் கொர கொரவென்று அரைத்துக் ெகாள்ளவும். அரசியை மைய அரைக்கக்கூடாது. ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். நறுக்கிய தேங்காயை நெய்யில் வறுத்து அரிசிமாவுடன் கலந்து கொள்ளவும்.
குழிப்பனியாரக் கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சூடானதும், மாவை அதில் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேகவிடவும். சூடாக சாப்பிடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். அவ்வப்போது சாப்பிடும் போது இட்லித்தட்டில் ஒரு ஆவி வைத்து சாப்பிடலாம்.

Related posts

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan

தால் கார சோமாஸி

nathan

ப்ராக்கோலி கபாப்

nathan

காரா ஓமப்பொடி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

சுய்யம்

nathan