31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்!

மாறிவரும் உலகில் நாம் உண்ணும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் சிறுவயதிலேயே உடல் பருமன் ஏற்பட்டு பெரும்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர்ந்து பாடாய்ப்படுத்துகிறது. மேலும், விருப்பப்பட்ட உடைகளை அணிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க 5 வழிமுறைகளை 30 நாள்கள் தொடர்ந்து கடைபிடித்தால், உங்கள் கால் வடிவமைப்பு ஃபிட் ஆகிவிடும்! எல்லாம் சும்மா கிடைச்சிடாது, கொஞ்சம் மெனக்கெடல்கள் வேண்டும்தானே…

தொடை கொழுப்பு

ஸ்டெப் 1

* உங்கள் டயட் சார்ட்டை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சற்று குறைத்துக்கொள்ளலாம்.

கால் கொழுப்பு குறைக்கும் உணவுகள்

* ஃப்ரஷ்ஷான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முழுதானியங்கள் மற்றும் முட்டை, மீன், பால் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும். உணவுக் கட்டுப்பாட்டினால் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கூட உங்களால் உணர முடியும்.

ஸ்டெப் 2

தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் வரை இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஐந்து நாள் வீதம் செய்யலாம். இந்த உடற்பயிற்சிகள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். மேலும், கால்களுக்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகளான நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங், ஹைக்கிங் (Hiking) எனப்படும் நீண்டதூர நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.

கால் கொழுப்பு குறைக்க உதவும் பயிற்சிகள்

ஸ்டெப் 3

ஸ்குவாடிங் (Squating) பயிற்சியை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் செய்யலாம். ஸ்குவாட்டிங் மற்றும் லஞ்சஸ் பயிற்சியையும் சேர்த்துச் செய்யலாம்.

* பயிற்சி: விரிப்பில் நேராக நிற்க வேண்டும். கைகளை முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இதேநிலையில் 10 நொடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இதேபோல் தொடர்ந்து 5 முறை செய்யலாம்.

கால் கொழுப்பு குறைக்க உதவும் பயிற்சி – ஸ்குவாடிங்

* இது கீழ் உடலுக்கான சிறந்த பயிற்சி. இந்தப் பயிற்சியானது காலின் வடிவமைப்பை மேம்படுத்தும். உடல் சமநிலைத்தன்மை பெற உதவும். தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கால் தசைகள் வலுப்பெறும். இதயத் துடிப்பைச் சீராக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஸ்டெப் 4

லஞ்சஸ் (Lunges) பயிற்சியை 30 நாள்கள் தொடர்ந்து செய்யலாம்.

* பயிற்சி: விரிப்பில், நேராக நிற்க வேண்டும். பின், முட்டிபோட வேண்டும். இப்போது வலது காலை முன்புறமாக மடக்கியபடி வைக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி வைக்க வேண்டும். இதேநிலையில் 30 முதல் 40 விநாடிகள் நிற்கலாம். இந்தப் பயிற்சியை 5 முறை செய்யலாம்.

கால் கொழுப்பைக் குறைக்கும் பயிற்சி – லஞ்சஸ்

* இது கால் முட்டிகள் வலுப்பெற உதவும். கூன் போடுவதைத் தடுத்து, முதுகுத்தண்டு நேராக உதவும். காலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய உதவும்.

படிகளில் ஏறலாம்

ஸ்டெப் 5

எஸ்கலேட்டர், லிஃப்ட் போன்றவற்றைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். தினசரி நாம் பயன்படுத்தும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 50 ஆகக் கொண்டால், 1000 கலோரிகளைக் குறைக்கலாம். இவை, நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்; ஆரோக்கியப் பழக்கமும் கூட!

Related posts

இந்த டயப்பர் ரேஷஸஸ் சரியாகவே மாட்டேங்குதா?…

nathan

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு குறைபாடுகளை போக்குவதில் உதவும் ஆசனங்கள்!!

nathan

கோடைகாலத்துல சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் செய்யவே கூடாதாம்…

nathan

ஆண்களே! எப்பவும் ஸ்மார்ட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட சகோதர/சகோதரியாக இருப்பீங்க

nathan

குட்டி தூக்கம் நல்லதா ?

nathan

தூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்த அதிசயத்தை பெறலாம்

nathan