23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kayam
ஆரோக்கிய உணவு

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.
இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது.
உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் தருகிறது பெருங்காயம். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.
ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன. பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.kayam

Related posts

சுவையான கொண்டைக்கடலை கட்லெட்

nathan

நாம் உண்ணும் சில உணவுகள் பற்களுக்கு நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

உங்களுக்கு தெரியுமா புட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை.

nathan

தெரிஞ்சிக்கங்க…அரிசியை ஏன் ஊறவைத்து சாப்பிடவேண்டும்?

nathan

கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கொழுப்பைக் குறைக்கும் தேநீர் வகைகள்

nathan

பிரச்சினை வரும் உஷார்! மதிய உணவு சாப்பிட்ட பிறகு இந்த 5 விடயங்களை கட்டாயம் செய்யாதீங்க!

nathan

பழங்கள் தரும் பலன்கள்

nathan