35.2 C
Chennai
Saturday, Jun 1, 2024
MqPZUTF
கேக் செய்முறை

ஸ்ட்ராபெர்ரி ஷார்ட் க்ரஸ்ட்

என்னென்ன தேவை?

மைதா – 200 கிராம்,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 50 கிராம்,
வெண்ணெய் – 100 கிராம் (ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாகக் குளிர வைத்து கெட்டியானது),
ஐஸ் தண்ணீர் – சிறிது,
கிரீம் – 2 கப் (whipped cream என்று கடைகளில் கிடைக்கும்),
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் – 2 கப் (நறுக்கியது).


எப்படிச் செய்வது?

மைதாவை பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலிக்கவும். வெண்ணெயை விரல் நுனியில், சிறிது சிறிதாக மைதாவுடன் சேர்த்து அழுத்தி விட்டால் பிரெட் தூள் போல தூள் தூளாக வரும். பின் சர்க்கரை, ஐஸ் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவை போல் பிசைந்து மூன்று பங்காகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி போல் 1/4" உயரத்திற்கு வட்டமாக இட்டுக் கொள்ளவும்.

இந்த மூன்று வட்ட பேஸ்ட்ரீக்களையும் பொன்னிறத்தில் 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் (Bake) செய்யவும். பேக் செய்த பின் 3 பெரிய பிஸ்கெட்டுகள் போல் இருக்கும் இந்த பேஸ்ட்ரீக்களை முன்கூட்டியே செய்து கொள்ளலாம். கிரீமை நுரைக்க அடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பரிமாறும் தட்டில், ஒரு பேஸ்ட்ரீயை வைத்து, அதன் மேல் கிரீைமத் தடவவும்.

மேலே ஸ்ட்ராபெர்ரி பழங்களைத் தூவவும். இவ்வாறே மூன்று லேயர்களுக்கும் தடவி, பக்கங்களையும் கிரீம் கொண்டு மூடவும். பழங்களைக் கொண்டு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்திருந்து பின்னர் ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.MqPZUTF

Related posts

சாக்லெட் பிரெளனி

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

ரிச்கேக் : செய்முறைகளுடன்…!

nathan

சாஃப்ட் வெனிலா கேக்

nathan

லவ் கேக்

nathan

கடலைமாவு கோவா பர்பி கேக்

nathan

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் (ஜெர்மனி)

nathan

தீபாவளி ஸ்பெஷல்: சாக்லேட் சிப்ஸ் கேக்!

nathan