31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கேக் செய்முறை

சாஃப்ட் வெனிலா கேக்

என்னென்ன தேவை?

மைதா – முக்கால் கப்,
சர்க்கரை – அரை கப்,
தயிர் – அரை கப் (ரூம் டெம்பெரேச்சர்),
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி,
எண்ணெய் – கால் கப்,
பேக்கிங் பவுடர் – முக்கால் தேக்கரண்டி,
பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி.

எப்படிச் செய்வது?

தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும். கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். அதனுடன் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவுக் கலவையை அதில் ஊற்றவும்.

மாவு கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி சிறு தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். (குக்கரில் தண்ணீர் ஊற்றா மல், கேஸ்கட் மற்றும் விசில் போடாமல் வைக்கவும். மணல் பரப்பி வைக்கும் முறையிலும் இதேபோல் வைக்கலாம்). உள்ளே வைக்கும் பாத்திரம் அலுமினியமாக இருந்தால் நல்லது. 15 நிமிடங்கள் கழித்து ஒருமுறை திறந்து பார்த்துக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பதத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து குக்கரை இறக்கவும். சுவையான முட்டை இல்லாத சாஃப்ட் வெனிலா கேக் தயார்

Related posts

சூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி???இதை படிங்க…

nathan

முட்டையில்லா வனிலா மைலோ கேக்/ Egg less Vanilla-Milo Marble Cake

nathan

மேங்கோ கேக்

nathan

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

nathan

பேரீச்சம்பழக் கேக்

nathan

முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: குக்கர் கேக்

nathan