33.9 C
Chennai
Thursday, May 30, 2024
201704041045003428 how to make carrot egg omelet SECVPF
அசைவ வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

குழந்தைகளுக்கு காய்கறிகளுடன் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேரட், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்
தேவையான பொருட்கள்:

முட்டை – 3
கேரட் – 1
மிளகு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்முறை :

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* மிளகை பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேரட் துருவல், உப்பு, பாதி மிளகுதூள் போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன், பாதி எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி அதன் மேல் மீதி எண்ணெயை பரவலாக ஊற்றவும். அடுப்பை மிதமாக எரியவிடவும்.

* இருபுறமும் நன்கு வெந்தவுடன் மேலே மீதி மிளகுதூளை தூவி விடவும்..

* சூப்பரான சத்து நிறைந்த கேரட் முட்டை ஆம்லெட் ரெடி.

* விருப்பப்பட்டால் ரொட்டித்துண்டுகளில் வெண்ணைய் தடவி, துண்டுகளாக்கிய ஆம்லெட்டை இடையில் வைத்து உண்ணலாம்.

* டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.201704041045003428 how to make carrot egg omelet SECVPF

Related posts

தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan

சுவையான சிக்கன் ப்ரை ரெசிபி

nathan

சுவையான முட்டை மிளகு மசாலா

sangika

நாட்டு ஆட்டு குருமா

nathan

ருசியான… பன்னீர் 65

nathan

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

சிக்கன் மிளகு கறி

nathan

புதினா சிக்கன் குழம்பு

nathan