36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

ஸ்பைசி முட்டை மசாலா

தேவையான பொருட்கள்:

முட்டை – 5
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி
இலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – ருசிக்க
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

• முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும்.

• தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

• அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

• பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

• தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

• சுவையான ஸ்பைசி முட்டை மசாலா ரெடி.

Related posts

சில்லி இறால் -கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

இறால் சாதம்

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

முந்திரி சிக்கன் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

இறால் கறி

nathan

சில்லி சீஸ் டோஸ்ட்

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan