31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘சிக்கன் பக்கோடா’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

சிக்கன் (எலும்பு நீக்கியது) – கால் கிலோ
பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) – 50 கிராம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கடலை மாவு – இரண்டு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். சிக்கன் பக்கோடாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

குறிப்பு:

சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான இறால் ஃப்ரைடு ரைஸ்

nathan

மீன் குழம்பு

nathan

கொத்துக்கறி புலாவ்

nathan

சிக்கன் முட்டை பொரியல்

nathan

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

கிராமத்து கருவாட்டுக் குழம்பு

nathan