31.1 C
Chennai
Monday, May 20, 2024
1476688374 9975
சிற்றுண்டி வகைகள்

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

தேவையானவை:

உளுத்தம்பருப்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – ஒரு கப்
புதினா – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மைய்ய அரைக்கவும். மாவுடன் கேரட் துருவல், கோஸ் பொடியாக நறுக்கியது, குடமிளகாய், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்துப் பிசையவும்.

பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:

நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.1476688374 9975

Related posts

பேப்பர் ரோஸ்ட் தோசை

nathan

வாழைப்பூ அடை

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

nathan

சுவையான கோதுமை போண்டா

nathan

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

nathan

பிரெட் க்ராப்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

பனீர் குழிப்பணியாரம்

nathan