36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ அடை

தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
பச்சை பயறு – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
பெருங்காய பொடி – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை:
* உளுத்தம் பருப்பு, பச்சைபயறு, அரிசி போன்றவைகளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். பின்பு அத்துடன் காய்ந்த மிளகாயை சேர்த்து அரையுங்கள்.
* வாழைப்பூவை சிறிதாக நறுக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் கலந்திடுங்கள். அத்துடன் உப்பு, பெருங்காய பொடி கலந்து தேவையான அளவு நீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.,
* சுவையான வாழைப்பூ அடை ரெடி.
* இது ஒரு சுவையான சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நார்ச்சத்து மிகுந்த சத்தான உணவு. கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது.

Related posts

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

nathan

பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

இந்த கேக் செய்து பாருங்க- 10 நிமிஷத்தில் காலியாகிடும்

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

மீல் மேக்கர் பக்கோடா செய்ய…!

nathan

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

nathan