30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

பிரெட் க்ராப்

என்னென்ன தேவை?

பிரெட் – 4 ஸ்லைஸ்,
மசித்த உருளைக்கிழங்கு – 1,
பச்சைப் பட்டாணி – 1/3 கப்,
துருவிய கேரட் – 1/3 கப்,
துருவிய கோஸ் – 1/3 கப்,
மைதா – 3 டீஸ்பூன்,
ரவை – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/3 கப்,
விதை இல்லாத பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – சிறிய துண்டு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் கேரட், கோஸ், இஞ்சி, பட்டாணி சேர்த்து வதக்கவும். அதில் கரம் மசாலா, சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பிரெட்டை தூளாக்கி அத்துடன் மைதா, ரவையை சேர்த்து உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து மாவு போல் பிசையவும். அதை நீளமாக திரட்டி அதன் நடுவில் இந்தக் கலவையை வைத்து ஜடை பின்னல் போல் மடிக்கவும். இதை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

Related posts

பனீர் நாண்

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ்

nathan

மீல்மேக்கர் வடை

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan

சுவையான மினி ரவை ஊத்தாப்பம்

nathan

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார்…

nathan