31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

மட்டன் எலும்பு சூப்

தேவையான பொருட்கள்:

ஆட்டு எலும்பு – 1/2 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு – 10 கிராம்
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
தனியாத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும்.

மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சத்தூள், உப்புத்தூள் சேர்க்கவும். தண்ணீர் 5 டம்ளர் சேர்க்க வேண்டும். நன்கு கொதித்து தேவையான அளவு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவைப்பார்த்து அதற்கேற்றவாறு மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து கொள்ளலாம்.

சுவைக்க சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.
குறிப்பு:
எலும்பை சற்று நசுக்கி சேர்த்தால் ஜுஸ் சூப்புடன் சேர்ந்து சுவை கூடும்.

Related posts

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ??

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan

தால் சூப்

nathan

புளிச்ச கீரை சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

நண்டு தக்காளி சூப்

nathan

வல்லாரை கீரை சூப்

nathan