நாம் எப்போதுமே அழகாக காட்சியளிக்க வேண்டும் என்றே விரும்புவோம். அதனால் தான் நம்மில் பலரும் அழகு சாதன பொருட்களையும் செய்முறைகளையும் பயன்படுத்துகிறோம். இதனால் உங்கள் அழகு மெருகேறும். ஆனால் அதனோடு சேர்ந்து சில தொற்றுக்கள் மற்றும் நோய்களும் கூட உங்களை வந்தடையும். பார்லர் மற்றும் வீட்டினில் மேற்கொள்ளும் அழகு சிகிச்சைகளால் உங்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் மற்றும் தீமைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
உங்கள் அழகு செயல்முறை உங்களுக்கு எப்படி தீமையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? இவ்வகையான பொருட்கள் உங்கள் சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
நீங்கள் பின்பற்றக்கூடிய சலூன் சிகிச்சை முதல் அன்றாட அழகு செய்முறைகள் வரை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 உடல்நல அபாயங்கள் உள்ளது. நீங்கள் பயன்படுத்தும் அழகு சிகிச்சைகள் மற்றும் பொருட்களின் மீது விழிப்புடன் இருக்க நாங்கள் கூறப்போகும் டிப்ஸ் உங்களுக்கு பெரிதும் உதவும்.
ஐ-லைனர்
பல நூற்றாண்டுகளாக ஐ-லைனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்களுக்கு அழகு சேர்த்து, அது தனியாக தெரியும் படி காட்ட உதவும் இந்த ஐ-லைனர் பெண்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகும். பல நேரங்களில் ஐ-லைனர் தடவுவதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை. இருப்பினும், கண்களுக்கு மிக அருகில் எந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலும், அது இடர்பாட்டை உண்டாக்கலாம். ரசாயனங்கள் கலந்துள்ள ஐ-லைனர்களை பயன்படுத்துவதால் எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவைகள் கண்களின் ஓரங்களில் படும் போது, கண்ணீர் குழாய்களையும் அடைக்கும்.
இறுக்கமான போனிடெயில் (குதிரை வால் கூந்தல்)
கூந்தலை எப்படி கட்டுவது என்பதை பற்றியெல்லாம் கருதாத போது, உங்கள் ஆரோக்கியத்தை பற்றியும் நீங்கள் சிந்திக்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் கூந்தல் என்பது உங்கள் அழகின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, உங்கள் ஆரோக்கியம் மற்றும் உணர்வுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். மிக இறுக்கமான போனிடெயில் போடுவதால், தலைச்சருமத்தில் உள்ள இணைக்கும் திசுக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தலை வலி உண்டாகும். அதன் காரணமாக முடி உதிர்தலும் ஏற்படும்.
முடிச்சாயம
் முடிச்சாயம் பயன்படுத்தக்கூடாது என்பது உங்களுக்கு இடியாக இருக்கலாம். ஆனால் உங்கள் முடிக்கு நிறப்பூச்சு அடிப்பதை தொடர்ந்தால் மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். முடிச்சாயத்தினால் ஏற்படும் அலர்ஜிகளுக்கு 80% காரணமாக இருப்பது பாரா-ஃபெனிலென்டியமைன் (பி.பி.டி) எனப்படும் ரசாயனம் என நம்பப்படுகிறது. இவ்வகையான அலர்ஜிகள் பெரும்பாலும் கொப்புளங்கள் மற்றும் சரும புண்கள் போன்ற பெரிய தாக்கத்தை ஏற்படுத்தா விட்டாலும் கூட, நிரந்தர முடி உதிர்தல் மற்றும் அறிய சூழ்நிலையில் மரணம் போன்ற சில நிலைகளை பி.பி.டி. ஏற்படுத்தும். இருப்பினும் அதன் தொடர்பு இன்னும் சரியாக
முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்ய உதவும் பொருட்கள்
சுருண்டிருக்கும் கூந்தலை சரி செய்து, முடியை சில மாதங்களுக்கு ஸ்ட்ரெயிட்னிங் செய்ய, பல பெண்கள் சலூனில் செய்யப்படும் ஸ்ட்ரெயிட்னிங் சிகிச்சைகளை விரும்புகிறார்கள். இருப்பினும், அமெரிக்காவை சேர்ந்த லேபர்ஸ் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன் (ஓ.எஸ்.எச்.ஏ) துறை, 2011 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உடல்நல எச்சரிக்கையின் படி, ஃபார்மல்டிஹைடு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ட்ரெயிட்னிங் பொருட்களில் கூட கார்சினோஜென் ஃபார்மல்டிஹைடு உள்ளது.
மஸ்காரா
மஸ்காராவை ஒவ்வொரு முறை தடவும் போதும், பாக்டீரியாக்கள் தேங்கும். இது மஸ்காரா ட்யூபின் இருட்டிலும், வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் பெருகத் தொடங்கும். இதனால் கண்களில் தொற்று உண்டாகும். மஸ்காராவுடன் தொடர்புடைய உடல்நல இடர்பாடுகளை குறைக்க, மஸ்காராவை குளிர்ந்த இடத்தில் வைத்திடுங்கள். அதேப்போல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதனை மாற்றிடவும்.
லிப்ஸ்டிக்
ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக இரண்டு முதல் நான்கு கிலோ வரையிலான லிப்ஸ்டிக்கை உண்ணுகிறார்கள். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் 28% லிப்ஸ்டிக்கில் உள்ளது என 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இது அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய தகவலாகும். 50% மேலான லிப்ஸ்டிக் பிராண்டுகளில் காரீயம் உள்ளது என்பது சோதனை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை பாதுகாப்பு அழகு சாதனங்களுக்கான 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முகாம் தெரிவித்துள்ளது.
மீன் பெடிக்யூர்
மீன் பெடிக்யூர் உலகம் முழுவதும் புகழை பெற்றுள்ளது. சொரியாசிஸ், அரிக்கும் தோலழற்சி அல்லது எளிய பெடிக்யூர்களுக்கு உதவிட மீன் ஸ்பாக்களை நாடி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மீன் பெடிக்யூர் மூலமாக எச்.ஐ.வி. மற்றும் ஹெபடைடிஸ் போன்ற கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது என அறிக்கைகள் கூறுகிறது. இந்த இடர்பாடுகள் குறைவு தான் என்றாலும் கூட, தங்கள் இரத்தத்தில் இவ்வகையான கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், சமீபத்தில் வேக்ஸிங் செய்தவர்கள் அல்லது கால்களை ஷேவ் செய்தவர்கள் இந்த சிகிச்சையில் ஈடுபடக்கூடாது.
அழகு சாதன பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல்
அழகு சாதன பொருட்களை பகிர்ந்து கொள்வதாலும் கூட தொற்றுக்கள் பரவும். ஒருவரை பார்த்த உடனேயே அவர் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய முடியாது. அதற்கு காரணம் வெளியே தெரிவதற்கு முன்பாகவே இந்த தொற்றுக்கள் பரவக்கூடும். லிப்ஸ்டிக்கை பகிர்ந்து கொள்வதால் சளி, புண்கள் போன்றவை ஏற்படலாம். இதுவே கண்களுக்கான மேக்-அப் என்றால் ஆபத்தான இடர்பாடுகளை உண்டாக்கும். அழகு சாதனங்களை பயன்படுத்தினால் அதன் மேற்பரப்பை துடைத்து விட்டே பயன்படுத்துங்கள்.
ஆல்பா மற்றும் பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்கள்
ஆல்ஃபா மற்றும் பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் அவை சுருக்கங்களை போக்கும் பொருட்கள், பருக்களுக்கான கிரீம்கள் உட்பட, பல்வேறு அழகு சாதன பொருட்களில் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு அமிலங்களுமே செத்த தோலை நீக்க உதவுகிறது. இருப்பினும் எரிச்சல், வீக்கம் மற்றும் எரியும் உணர்வு போன்ற பக்க விளைவுகளை இது உண்டாக்கும். இதிலுள்ள ரசாயனங்கள் மிக ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது புறஊதாக்கதிர் சரும பாதிப்பு இடர்பாட்டை அதிகரிக்கும். இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு அதிகம்.
பொய்யான நகங்கள்
பொய்யான நகங்களை சரியாக பொருத்தியிருந்தாலும் கூட அவை உங்கள் உடல்நலத்தின் மீது இடர்பாட்டை உண்டாக்கும். இவைகளை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலோ அல்லது மோசமான தரத்திலுள்ள நகங்களை பயன்படுத்தினாலோ அல்லது நகங்களை சரியாக பொருத்தாமல் போனாலோ, இயற்கையான நகங்கள் உடைந்து விடக்கூடும். மேலும், சில செயற்கை நகங்களில் மெத்தில் மீத்தாக்ரைலேட் (எம்.எம்.ஏ) என்ற ரசாயனம் உள்ளது. இது சுவாச கோளாறுகள் மற்றும் தீவிர அலர்ஜிகளை ஏற்படுத்தக்கூடும். செயற்கை நகங்களை பொருத்துவதற்கு புறஊதா கதிர் விளக்குகளிடம் அதிகமாக கைகளை காட்டுவதால் சரும புற்றுநோய் ஏற்படும்