மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாமதமாகும் மாதவிடாய்க்கு தீர்வு தரும் கைவைத்தியங்கள்

மாதவிடாய் சுழற்சி முறையாக நடைபெறாமல் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் ஆகும். ஆனால் சுழற்சியின் கால அளவு 35 நாட்களுக்கு மேல் நீடிக்கும்போது அது ஒழுங்கற்ற மாதவிடாயாக கருதப்படுகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, தைராய்டு கோளாறுகள், கல்லீரல் பாதிப்பு, கருச்சிதைவு, மனோபாஸ் காலகட்டம், எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு, காபின் கலந்த பானங்களை அதிகமாக நுகர்வது, கடுமையான உடற்பயிற்சி, சில மருந்துகள், பிற உடல்நலப் பிரச்சினைகள் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. மாத விடாய் தாமதமாகும்போது தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அடி வயிற்றில் பிடிப்பு, இடுப்பு பகுதியில் வலி, மன நிலையில் மாற்றம், எரிச்சல் போன்ற சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் மாதவிடாய் தாமத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

மஞ்சள்: ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு இது சிறந்த நிவாரணியாக செயல்படும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவும். ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிடாய் அறிகுறிகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பழுக்காத பப்பாளி: ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பழுக்காத பப்பாளியை சாப்பிடலாம். இது மாதவிடாயைத் தூண்டக்கூடியது. பப்பாளி காயை சமைத்தால் அதிலிருக்கும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். பப்பாளியை சாலட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட பரிந்துரைக்கப்படாததால், நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனித்துக்கொள்வது அவசியம்.

இஞ்சி டீ: இஞ்சி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவும். இஞ்சியை பொடித்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயாரித்து பருகலாம். அதனுடன் சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான இனிப்பு பொருளை சேர்த்துக்கொள்ளலாம். மாதவிடாய் தாமதமாகும் சமயத்தில் தினமும் இரண்டு முறை இஞ்சி டீ பருகலாம். இது மாதவிடாயைத் தூண்ட உதவும்.

கொத்தமல்லி: மாதவிடாய் தாமதமாகி மன அழுத்தத்தை அனுபவித்தால் கொத்தமல்லியை தேர்ந்தெடுக்கலாம். கொத்தமல்லி இலை மற்றும் விதைகளை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக தயாரித்து பருகலாம். இது மாதவிடாயை சீராக்க உதவும். ஒழுங்கற்ற மாதவிடாயை குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக கொத்தமல்லி தழை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம்: ஒழுங்கற்ற மாதவிடாய் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மன அழுத்தம்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

ஏனெனில் மன அழுத்தம்தான் தாமதமான மாதவிடாய்க்கு வித்திடுகிறது. பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. மாதவிடாய் தாமதமாவது இயல்பானது. பீதியோ, பதற்றமோ அடைய தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். தூக்கமும் அவசியம். மாதவிடாய் சுழற்சியில் இரண்டு, மூன்று முறைக்கு மேல் தாமதம் நேர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button