ஆரோக்கியம் குறிப்புகள்

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

நமக்கே தெரியாமல் நிறைய உடல்நல தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை இந்த தவறுகளை நாம் தினந்தோறும் தவறாமல் செய்து வருகிறோம் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். "அட இதுவெல்லாமா உடம்புக்கு கெட்டது.." என நீங்கள் ஆச்சரியமடையும் விஷயங்களும் இருக்கின்றன.

உடற்பயிற்சி, வாயுப் பிரச்சனை, சிக்கன், மது, புகை, சிரிப்பு என இன இந்த பட்டியல் பெரிதாக இருப்பினும், நீங்கள் சின்ன சின்ன திருத்தங்கள் செய்துக் கொண்டாலே போதுமானது. இனி, நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்….

தினமும் டமால் டுமீல்
டமால், டுமீல் வராம இருந்தால் தான் பிரச்சனையே. உங்களுக்கு டமால் டுமீல் வந்தால் இரத்த அழுத்தம் குறைகிறது. மற்றும் இது உடல்நலத்திற்கு நல்லது என ஆய்வுகள் கூறுகிறது. சரவெடியாக வெடிப்பது தான் தவறு.

புகை, மதுவிற்கு நிகராய்…
புகை மற்றும் மதுவிற்கு நிகராய், தினசரி உடற்பயிற்சி செய்யாத காரணத்தால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. நல்ல உடல்நலத்திற்கு தினசரி உடற்பயிற்சி அவசியம் தேவை.

காலை மற்றும் இரவு உணவு
காலை மற்றும் இரவு உணவை அன்றாடம் வெளியிடங்களில், ஹோட்டல்களில் சாப்பிடும் நபர்கள் தான் அதிகமான உடல் பருமனோடு வாழ்கிறார்கள்.

சிரிப்பும் உடற்பயிற்சியே
ஓர் நாளுக்கு நூறு முறை நீங்கள் சிரிப்பதும், 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதும் சமம். உடல்நலத்தை மேம்படுத்த உதவும்.

மூன்று மணி நேரம் உட்கார்வது ஓர் நாளுக்கு நீங்கள் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்தே இருப்பது, உங்கள் வாழ்நாளில் இரண்டு ஆண்டுகளை குறைத்துவிடும்.

கோலா பானம் தினமும் ஒரு கோலா பானம் குடித்தால், உங்களுக்கு டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 22% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வயதான தோற்றம் அதிகமான மன அழுத்தம், மன சோர்வு போன்றவை உடலில் இருக்கும் செல்களின் முதிர்ச்சியை அதிகரித்து, உங்கள் வயதை விட அதிகமாக முதுமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

சிக்கன் முன்னர் இருந்த நாட்டுக் கோழியைவிட இப்போது இருக்கும் பிராய்லர் கோழிகளில் 266% கொழுப்பு அதிகம். இதனால் தான் இதய கோளாறுகள் மற்றும் உடல்பருமன் அதிகமாக ஏற்படுகிறது.

28 1440761451 1 coveramazingmedicalbenefitsofhingthatreliefsfromgastricproblems

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button