ஆரோக்கியம் குறிப்புகள்

புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர நடவடிக்கைககள்!!!

ஆணும் பெண்ணும் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும், உணர்வெழுச்சி நிலைகளிலும் மாறுபட்டவர்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் ஆண்கள் வலிமையானவர்கள். அனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவார்கள்.

ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!

ஆண்கள் இந்த மனவேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களாகக் கருதுகின்றனர். பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ளாத 11 மிகவும் பொதுவான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சற்று அதைப் படித்து பாருங்களேன்…

ஏன் பெண்கள் அதிக நாடகம் போடுகிறார்கள்?

பெண்கள் உணர்வுகளாக கருதும் விஷயங்கள் ஆண்களுக்கு நாடகமாகத் தோன்றுகிறது. சில நேரங்களில் பெண்கள் அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர். இது நாடகம் இல்லை. ஆனால் ஆண்கள் இதனை நாடகம் என்றே நினைக்கின்றனர்.

ஏன் பெண்களால் தெளிவாக பேச முடியாது?

பெண்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் துணைவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் ஆண்கள், இதற்கு நேர்மாறாக அனைத்து கருத்துக்களையும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்கள் நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எனவே அவர்கள் அனைத்தையும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், மற்றும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட உறவுமுறைகளை நடைமுறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கருதுவார்கள்.

ஏன் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்?
ஏன் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்?
ஆண்கள் மிகவும் குழம்பும் மற்றொரு விஷயம் பெண்கள் ஏன் திருமணத்திற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது தான். ஆனால் உண்மையான சூழ்நிலை என்னவென்றால், ஆண்கள் கடமைகளை சுமக்க எந்த அவசரமும் இல்லாமல் இருக்கும் அதே நேரத்தில் பெண்கள், ஒரு பாதுகாப்பான குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அவர்கள் தயாராவதற்கு ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்?
அவர்கள் தயாராவதற்கு ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்?
இது அவர்களின் பலவீனமாக கருதப்படுகிறது. பெண்கள் தாங்கள் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். மறுபக்கம் ஆண்கள், பெண்கள் ஏன் மற்றவர்கள் குறித்து கவலை கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஏன் பெண்கள் அதிகம் உலவுகிறார்கள்?
ஏன் பெண்கள் அதிகம் உலவுகிறார்கள்?
ஆண்கள் தங்களுக்கு தேவையான துணிகள் மற்றும் பொருள்களை ஒரே கடையில் இருந்து வங்கிக் கொள்கின்றனர். ஆனால் பெண்கள் முழு சந்தையையும் சுற்றுகின்றனர். அவர்கள் அவ்வளவு எளிதில் திருப்தி அடைவதில்லை. இது ஆண்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆனால் சிறந்ததை தேடிக் கண்டுபிடித்து பெறுவது பெண்களின் இயல்பு.

ஏன் பெண்கள் அதிகாரம் செலுத்த விரும்புகிறார்கள்?
ஏன் பெண்கள் அதிகாரம் செலுத்த விரும்புகிறார்கள்?
ஆண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத நேரங்களிலும் கூட கவனம் செலுத்துமாறு பெண்களால் அதிகாரம் செய்யப்படுவதாக எண்ணுகின்றனர். பெண்கள் அக்கறை மற்றும் பாதுகாப்பு வேண்டும் என்று நினைப்பதால், ஆண்கள் எப்பொழுதும் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எதற்கு இவ்வளவு காலணிகள்?

இது பெண்களின் ஒரு பலவீனமாக கூட இருக்கலாம். பெண்கள் எப்போதும் காலனி விஷயத்தில் திருப்தி அடைவதே இல்லை. அவர்கள் புதிதாக வாங்கவே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் அறை முழுவதும் காலணிகள் நிறைந்து இருந்தாலும் கூட திருப்தி அடையாமல் பேஷனிற்கு ஏற்றவாறு தங்கள் எண்ணங்களையும் மாற்றிக் கொள்வார்கள்.

ஏன் பெண்கள் சாக்லேட்டை அதிகம் விரும்புகிறார்கள்?

ஆண்கள் மனதிலுள்ள மற்றொரு புதிர், அது எப்படி சாக்லேட் ஒரு நாளிலுள்ள அனைத்து கவலைகள் மற்றும் மன அழுத்தங்களை வெளிக் கொணர முடியும் என்பது தான். ஆனால் இதற்கு பெண்கள் அளிக்கும் பதில், எங்களுக்கு சாக்லேட் ரொம்ப பிடிக்கும்.

ஏன் பெண்கள் பல்வேறு மனநிலையை வைத்திருக்கிறார்கள்?

பொதுவாக ஆண்களால் பெண்களின் மனநிலையை புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் பெண்களுக்கு ஒரு மாதம் வரை அனைத்துமே மிகவும் நல்லது, ஆனால் பின் அதனை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதற்கு காரணம் பெண்கள் எப்போதும் ஒரே விஷயத்தில் ஒட்டிக் கொள்ள விரும்புவதில்லை. மேலும் அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

வீடியோ கேம் மற்றும் விளையாட்டுக்களை அவர்கள் வெறுப்பது ஏன்?

ஆண்கள் அலுவலகத்திலிருந்து வந்த பின் வீடியோ கேம் அல்லது வேறு விளையாட்டுகள் விளையாடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இது பெண்களை எரிச்சலடையச் செய்கிறது. அவர்கள் ஆண்கள் அலுவலகத்திலிருந்து வந்த பின் முழு கவனத்தையும் தங்கள் மீது செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அவர்களுக்கு எங்கள் நகைச்சுவைகள் ஏன் பிடிக்காது?

ஆண்களின் நகைச்சுவை உணர்வு பெண்களிலிருந்து மாறுபட்டது. இதுவே, ஆண்களுக்கு ஏன் தங்கள் துணைவர் தங்கள் நகைச்சுவைகளுக்கு சிரிக்கவில்லை என்று தோன்ற வைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button