சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை

பருப்பு வடையை விட பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை
தேவையான பொருட்கள் :

பட்டாணிப் பருப்பு – 200 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
அரிசி – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் – சிறிய துண்ட
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

* இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

* மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி. 201702251055285861 pattani paruppu vadai dry yellow peas vadai SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button