29.9 C
Chennai
Friday, May 16, 2025
dCYA9lv
சைவம்

பச்சை சுண்டைக்காய் குழம்பு

என்னென்ன தேவை?

பச்சை சுண்டைக்காய் – 1 கப்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8,
தனியா – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தாளிக்க கடுகு – சிறிது,
பூண்டு – 15 பற்கள்,
புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.


எப்படிச் செய்வது?

பச்சை சுண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு 5 பற்கள் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சைச் சுண்டைக்காய்களைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி கலக்கவும். சுண்டைக்காயோடு மசாலா நன்கு கலந்து வந்ததும் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.dCYA9lv

Related posts

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

சூப்பரான பச்சை பட்டாணி மசாலா

nathan

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்tamil samayal kurippu

nathan

கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி

nathan

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan

மிளகு காளான் வறுவல்

nathan

காளான் மஞ்சூரியன்

nathan

கட்டி காளான்

nathan