29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl4680
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு சீஸ் பால்ஸ்

என்னென்ன தேவை?

வேகவைத்து உரித்து மசித்த உருளைக்கிழங்கு – 2,
வாழைத்தண்டு – பாதி (நறுக்கி நார் எடுத்தது),
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
பச்சைமிளகாய் – 2,
தேங்காய்த்துருவல் – 1 கைப்பிடி,
முந்திரிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
மொசெரேலா சீஸ் – 1 கப்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
சோள மாவு – 1/2 கப்,
வறுத்த சேமியா – 1 கப்,
தக்காளி சாஸ், மயனைஸ் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைத்தண்டு, தேங்காய்த்துருவல், முந்திரிப்பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கரம்மசாலா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். சிறிது தண்ணீரில் சோள மாவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும். உருளைக்கிழங்கு கலவையை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து தட்டவும்.

அதில் ஒரு துண்டு மொசெரேலா சீஸை எடுத்து நடுவில் வைத்து உருண்டையை சோளமாவு கலவையில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுக்கவும். எண்ணெயை சூடாக்கி உருண்டையை பொன்னிறமாக பொரித்தெடுத்து, தக்காளி சாஸ் மற்றும் மயனைஸுடன் பரிமாறவும்.sl4680

Related posts

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan

பச்சை பட்டாணி கச்சோரி

nathan

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

ரவா அப்பம்

nathan

கறிவேப்பிலை இட்லி

nathan

வாழைப்பூ அடை

nathan

மொறு மொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

வாழைப்பூ பச்சடி

nathan