30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

டிரை ஃப்ரூட் தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 1 கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
பெரிய கற்கண்டு (பொடித்தது) – 10 டேபிள்ஸ்பூன்,
பேரீச்சம்பழம் – 25,
உலர் திராட்சை – 25,
டூட்டி ஃப்ரூட்டி – 2 டேபிள்ஸ்பூன்,
தேன் – 5 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 30,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

• அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

• பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும்.

• ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும். மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும்.

• பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும். 8 அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Related posts

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

சத்தான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

பிரட் பஜ்ஜி

nathan

பொன்னாங்கண்ணிக்கீரை – ஓமம் சப்பாத்தி

nathan

முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல்

nathan