31.9 C
Chennai
Monday, May 19, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

piel335 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்’ கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்’ போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு.

Related posts

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம்.

nathan

Tomato Face Packs

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan

மஞ்சளை பூசி குளிக்கும் பெண் மகாலட்சுமியை போன்ற முக வசீகரத்தையும், பொலிவையும், மகாலட்சுமியின் குணநலன்களையும், அருளையும் பெறுகிறாள் என சாஸ்திரம் கூறுகிறது.

nathan

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

nathan

ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து வரும் தளபதி விஜய்! கசிந்த புகைப்படம்

nathan

பாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன்!

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

உங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்…!!

nathan