28.9 C
Chennai
Monday, May 20, 2024
625.500.560.350.160.300.053.800.90 5
முகப் பராமரிப்பு

உங்கள் முகத்தை 15 நிமிடத்திலேயே பளிச்சென்று ஆக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

எல்லோருமே தங்களுடைய முகம் வெள்ளையாகவும், பொழிவுடனும் இருக்க பல க்ரீமையும் பயன்படுத்துவார்கள்.

ஆனாலும் அதெல்லாம் பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தவிர்க்க இயற்கையான சில பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பளிச்சென்று 15 நிமிடத்தில், வீட்டிலேயே வெள்ளையாக மாற்றிக்கொள்ள முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடலை மாவு – 1 ஸ்பூன், முல்தானி மெட்டி – 1/2 ஸ்பூன், சந்தனப் பொடி – 1/2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், காய்ச்சாத பால் – 1 ஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு – 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன்.

உங்களது முகம் வறட்சித் தன்மை கொண்டதாக இருக்கின்றால், அதாவது ட்ரை ஸ்கினாக இருக்கின்றால், முல்தானிமெட்டி பொடி பயன்படுத்தக்கூடாது. அடுத்து உங்களது முகம், எண்ணெய் வடியும் தன்மை கொண்டதாக இருக்கின்றால், அதாவது ஆயில் ஸ்கின் இருக்கின்றால் பால் பயன்படுத்தக்கூடாது.

மற்றபடி மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை, சரியான அளவு கலந்து, பேஸ்டாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது முகத்தில் உள்ள மேக்கப்பை முதலில் நன்றாக, தேங்காய் போட்டு துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

அதன் பின்பாக ஒரு துண்டை வைத்து உங்கள் முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிட வேண்டும். சோப்பு போட்டு முகம் கழுவக் கூடாது.

இந்த பேஸ்ட்டை உங்கள் உடலில் எந்த இடத்தில், கருமை நிறம் அதிகமாக இருக்கின்றாலும், அந்த இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு நாளிலேயே கருநிறம் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்! அடர்த்தியாக கருப்பு இருக்கும் பட்சத்தில், இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால், கட்டாயம் அந்த கருப்பு காணாமல் போய்விடும்.

அதாவது கை முட்டி, கால் முட்டி, கழுத்துப் பகுதிகளில் சில பேருக்கு வறட்சியாக காணப்படும். அந்த இடங்களில் கூட இந்த பேஸ்டை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

உடனடியாக வெளியே செல்ல வேண்டும் என்றால், இனி கவலைப்படத் தேவையே இல்லை. பதினைந்தே நிமிடத்தில், பள பளப்பான முக தோற்றத்தை பெற இந்த குறிப்பை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.

உங்களுக்கு பிடித்திருந்தால் வாரத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ இந்த பேஸ்ட்டை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம், பக்கவிளைவுகள் ஏற்படாத அழகு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக் கூடாது?

nathan

உங்களுக்கு தங்கமாய் முகம் ஜொலிக்கனுமா? இத ட்ரை பண்ணி பாருங்க !!

nathan

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!இதை படிங்க…

nathan

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

nathan

சருமத்தை பொலிவாக்கும் குங்குமாதி தைலம்

nathan

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

nathan