33.2 C
Chennai
Thursday, May 15, 2025
201702071257309280 ginger green chilli thokku SECVPF
​பொதுவானவை

இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு

அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று அஜீரண பிரச்சனைக்கு உகந்த இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு
தேவையான பொருட்கள் :

இளம் இஞ்சி – 25 கிராம்,
பிஞ்சு பச்சை மிளகாய் – 10,
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
அச்சு வெல்லம் – ஒன்று,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி நறுக்கவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.

* மிக்சியில் வதக்கிய இஞ்சி, புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு அரைக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

* சூப்பரான இஞ்சி – பச்சை மிளகாய் தொக்கு ரெடி.

குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
201702071257309280 ginger green chilli thokku SECVPF

Related posts

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா?

nathan

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

கேரளா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan

தனியா ரசம்

nathan

சுவையான உருளை கிழங்கு பொரியல்

nathan

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan