30.3 C
Chennai
Sunday, May 26, 2024
201702031026187297 samai vegetable soup little millet vegetable soup SECVPF
சூப் வகைகள்

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

சத்து நிறைந்த சாமை அரிசியையுடன் காய்கறிகளை சேர்த்து காலை சிற்றுண்டிக்கு உகந்த சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – கால் கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்
பால் – கால் கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்,
புதினா, கொத்தமல்லி – கால் கப்,
சீரகம் – கால் தேக்கரண்டி,
மிளகுப் பொடி – ஒரு தேக்கரண்டி,
உப்பு, வெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

* வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரை சூடாக்கி, வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் சீரகம், இஞ்சி, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, காய்கறிகள், புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் 5 டம்ளர் நீர் சேர்த்து (4 விசில்-10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில்) வேகவிட்டு இறக்கவும்.

* குக்கர் விசில் போனவுடன் திறந்து உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

* சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப் ரெடி.
201702031026187297 samai vegetable soup little millet vegetable soup SECVPF

Related posts

பட்டாணி சூப்

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

சூப்பரான சுவையான வெஜிடபிள் சூப்..!

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

வொண்டர் சூப்

nathan