27.7 C
Chennai
Saturday, May 17, 2025
201701261059184343 Mysore masala dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

மசாலா தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம்.

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை
தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

மிளகாய் சட்னிக்கு…

சிவப்பு மிளகாய் – 5
வறுத்த கடலைப் பருப்பு – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
பூண்டு – 2 பற்கள்
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்க விடவும்.

* மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, ப.மிளகாயை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

* கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் மாவை ஊற்றி மெல்லிய தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி (தோசை முழுவதும் படும்படி), நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, சுற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும்.

* இப்போது சூப்பரான மைசூர் தோசை ரெடி.
201701261059184343 Mysore masala dosa SECVPF

Related posts

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

சோயா காளான் கிச்சடி

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

nathan

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

nathan

காரா ஓமப்பொடி

nathan

சூப்பரான ஜவ்வரிசி வடை

nathan

சுவையான பிரெட் - அவல் சப்பாத்தி

nathan

வேர்க்கடலை லட்டு

nathan