28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
152071 17338
ஆரோக்கிய உணவு

புளி அல்ல… மாணிக்கம்!

புளி… உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் வீட்டு பொக்கை வாய்ப் பாட்டி இப்படிச் சொல்வார்… `நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா… மல்லித்தழையையும் பெருங்காயத்தையும் இறக்கும்போதுதான் போடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் அதுல மணம் இருக்காது.’ இந்த வார்த்தைகளை அதன் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தித்தான் வருகிறோம்.

புளி அல்ல… மாணிக்கம்!

சமீபகாலமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்டை போடாத பிரியாணி, மல்லித்தழை இல்லாத ரசம், கறிவேப்பிலை இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி… என தமிழர்களின் சமையல் பழக்கத்தில் பெரும் மாற்றம்! `ஏம்ப்பா… இப்படி உயிரே இல்லாம சமைக்கிறீங்க?’ என்று பதறிப்போய் கேட்டால், ‘எப்படியும் அது எல்லாத்தையும் சாப்பிடுறப்போ எடுத்து தூரப் போடப் போறோம்… அதை எதுக்கு வேஸ்ட்டா போட்டுக்கிட்டு?!’ என விவரமாக பதில் சொல்கிறது இன்றைய இளைய தலைமுறை.

`சுவை, மணம், காரம் தூக்கலாக இருப்பதற்காகவே இந்த சமையல் அலங்காரங்கள்’ என்றே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல.

ஆங்கிலத்தில் ஸ்பைசஸ் (Spices) என்றால் காரம் என அரைகுறையாகப் புரிந்துகொண்டது முதல் சிக்கல். மல்லி, கறிவேப்பிலை என நீளும் மணமூட்டிகள் உணவை மருந்தாக்கும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதை மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல்.

புளி

புளி… மகிமை!

* ‘புளிக்குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணம்தான் அவர்களுக்கு அலர்ஜியை வரவழைத்துவிடுகிறது. கறுப்பு என்றால் அழுக்கு, பழுப்பு என்பது பரவாயில்லாத அழுக்கு என்கிற விஷமத்தனமாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனநிலை காரணமாகவே புளிக்குழம்பைப் பழிக்கிறார்கள். ஆனால், இது மகத்தான மருத்துவக் குணம் கொண்டது என்பதை ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பல்வேறு வகையான காய்ச்சல், அஜீரணம், சுவாச நோய்கள் ஆகியவற்றுக்கும் புண்ணை ஆற்றும் தன்மைக்கும் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இதைத்தான் நம்பியிருக்கின்றன. இதை, `ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி’ (Journal of Ethnopharmacology) எனும் மருத்துவ நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

* புளிக்கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே, காய்கறிகளின் புரதச்சத்து, பல கனிமச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற தேசிய உணவியல் கழகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்னோர்களின் பழக்கத்துக்குக் கிடைத்த அறிவியல் அங்கீகாரம்.

* இதில் அதிகம் இருப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம். அதோடு வைட்டமின் பி வகைச் சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குணமுள்ள கூறுகள் (Phytonutrients) நிறையவே உள்ளன. பார்வைத்திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரணக் கிருமித் தொற்று முதல் வயோதிகம் உண்டாக்கும் பிரச்னைகள் வரை தீர்ப்பதற்கு புளிக்கரைசைலைப் பயன்படுத்தலாமா என ஆய்வாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

152071 17338

`அதிக சர்க்கரைக்கும், அதிக ரத்தக் கொழுப்புக்கும்கூட புளி வேலை செய்வதில் புலியா?’ என பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள்.

* `மருத்துவக் குணமும், பட்டையைக் கிளப்பும் ருசியும் கொண்டது’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஐரோப்பாவின் `வோர்செஸ்டெர்ஷைர் சாஸ்’ (Worcestershire sauce), ஜமைக்காவின் பிக்காபெப்பா சாஸ் (Pickapeppa sauce) இரண்டிலும் நாம் இளக்காரமாக நினைக்கும் புளிக்கரைசல்தான் மிக முக்கியப் பொருள்.

* நம் ஊர் அம்மன் கோயில் பானகத்தின் ருசிக்கு ஈடு ஏது? அதற்கு யாராவது ஒரு ஆங்கில சாஸ் பெயரை வைத்தால், இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிடுவார்களோ, என்னவோ!

`தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள்’ என்றால் அவை `ஸ்பைசஸ்’ எனப்படும் மணமூட்டிகள்தான். அவற்றில் புளி, நம் ஆரோக்கியம் காக்கும் அற்புதமான மாணிக்கம்!

Related posts

உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

nathan

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

வாழைத்தண்டு ஆச்சரியங்கள்! சர்க்கரை நோயை தடுக்கும்! உடலின் நச்சுக் கழிவுகள் வெளியேறும்…

nathan

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தக்காளியை ப்ரிட்ஜில் சேமித்து வைப்பவரா நீங்கள்?…

nathan

பால் அல்லது தயிர் – இவற்றில் எது ஆரோக்கியமானது?

nathan

தூதுவளை சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!

nathan

தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? தெரிஞ்சிக்கங்க…

nathan