பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்
பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை பற்றியும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.
10 வயது பிரச்சனைகள் :
கால்சியம் பற்றாக்குறை
இரும்புச்சத்துப் பற்றாக்குறை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
தீர்வு:
தவறாமல் அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும்.
11 -20 வயது பிரச்னைகள்:
பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்
சுகாதாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
தீர்வு :
ஹெ.பி தடுப்பூசி,இரும்புச்சத்து, கால்சியம் அளவைப் பராமரிப்பது பாலியல் விழிப்புஉணர்வு பற்றிய அறிவைப் பெறுவது
21 – 40 வயது பிரச்னைகள் :
ரத்தசோகை
ஃபோலிக் அமிலக் குறைபாடு
பி.சி.ஓ.டி
பருமன்
தீர்வு :
கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது
தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது
41-60 வயது பிரச்னைகள் :
மெனோபாஸ் பிரச்னைகள்
அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்
எலும்பு அடர்த்திக் குறைவு,
அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்
அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள்
சர்க்கரை நோய்
தீர்வு :
தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது
கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள்
கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது
60 வயதுக்கு மேல் பிரச்னைகள் :
இதய நோய்கள்
சர்க்கரை நோய்
கண் நோய்கள்
எலும்பு அடர்த்திக் குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு
தீர்வு :
சமச்சீர் உணவு – குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புகள் உள்ள உணவுகள்.
தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது.