மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்.. நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள்!

ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என 30-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகை உள்ளன.

இந்தியர்கள் பலர், புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள். புகை பிடிப்பதும், அந்தப் புகையை சுவாசிப்பதும் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிசெய்கிறது.
நுரையீரல் புற்றுநோய்

ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் புற்றுநோயால் கடந்தாண்டில் பாதிக்கப்பட்டவர்கள், 11,57,294 பேர். இதில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே 67,795 பேர் என்பதும் அதில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தி.

நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் குறித்து, புற்றுநோயியல் மருத்துவர் எஸ்.ராஜசுந்தரத்திடம் பேசினோம். “மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் இருப்பது, நோய்க்கான தொடக்கமாக அமைந்திருக்கலாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். இருமலோடு ரத்தம் வெளிவருவது போன்றவையெல்லாம் ஆரம்பகட்ட அறிகுறிகள். இவற்றில் முன்கூட்டியே கவனம் செலுத்தினால், நோயின் வீரியத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.
நுரையீரல் புற்றுநோய்

நோயின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கினால், மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரலில் நீர் சேர்வது, அடுத்து எலும்பில் நீர் சேர்ந்து மிகுந்த வலியெடுப்பது, கல்லீரலில் நீர் சேர்ந்து மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, மூளையில் நீர் சேர்ந்து வலிப்பு உண்டாவது எல்லாமே, நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தால் ஏற்படும் பாதிப்புகளாகவும் இருக்கலாம்.
gdeh
நுரையீரல் புற்றுநோய், 70 சதவிகிதம் புகைப்பழக்கத்தால் ஏற்படுவதே. புகை பிடிப்பவரின் அருகில் இருந்து அந்தப் புகையை சுவாசிப்போருக்கும் (passive smoking), இந்த பாதிப்பு நேர்கிறது. பெண்கள் இப்படித்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோய்

மேலைநாடுகள் பலவற்றிலும் நகப் பரிசோதனை பற்றிய செய்திகள் பரவலாகிவருகின்றன. இரண்டு கைகளின் ஆள்காட்டி விரல்களையும் ஒட்டிவைக்கும்போது, அவற்றின் இடையே சிறிய இடைவெளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவருக்கு நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், இது அறிவியல்பூர்வமான பரிசோதனையல்ல. இதை நம்ப வேண்டாம்” என்றார். ஒருவேளை இதுகுறித்த சந்தேகமிருந்தால், நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button