29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

தினை உப்புமா அடை

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 1/2 கப்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
மிளகு – 3/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
துருவிய கேரட் – 3 ஸ்பூன் (விரும்பினால்)
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – தாளிக்க

செய்முறை :

• துவரம் பருப்பு, சீரகம், மிளகை மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட்டை போட்டு வதக்கவும்.

• கேரட் சிறிது வதங்கியதும் அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் போது உப்பு, தினை, பொடித்த பருப்பு போட்டு மிதமான தீயில் நன்றாக வேக விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி கலவை கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

• பின் இந்த கலவையை உருண்டைகளாக பிடித்து அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்..

• சுவையான சத்தான தினை உப்புமா அடை ரெடி.

Related posts

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

nathan

பாலக் ஸ்பெகடி

nathan

மனோஹரம்

nathan

வெல்லம் கோடா

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan