13 1439445494 9eatingfriedfoodwasheddownyourhealth
ஆரோக்கிய உணவு

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

பெரும்பாலும் தெற்கத்திய உணவு பாணி என்று தான் கூறப்படுகிறது காரசாரமான மற்றும் வறுத்த உணவுகள். தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் வறுத்த உணவுகள் தான் அதிகம். சாம்பார், ரசம், தயிராக இருந்தாலும், அசைவ சாப்பாடாக இருந்தாலும் கூட, தொட்டுக்கொள்ள ஏதேனும் வறுத்த உணவு இருந்தால் தான் நம்மவர்களுக்கு சாப்பாடு தொண்டைக் குழிக்குள் இறங்கும்.

ருசிமிக்க உணவாகவும் வறுத்த உணவுகள் இருக்கின்றன. இதனால் தான் வறுத்த உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நம்மில் பெரும்பாலானவர்களால் கைவிட முடியாமல் இருக்கிறது. நாவுக்கு ருசியை அதிகரிக்கும் இந்த வறுத்த உணவுகள், நமது ஆரோக்கியத்திற்கு விஷமாக கசக்கிறது என்பது நம்மில் பலர் அறியாத உண்மை….

இதய பாதிப்புகள் அதிகம்
முட்டை, இறைச்சி போன்ற வறுத்த உணவுகளை வழக்கமாக அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. இவர்களுக்கு மற்றவர்களை விட 56% இதய பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறதாம்.

வரும் ஆறு ஆண்டுகளில்
வரும் ஆறு ஆண்டுகளில், மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களில் மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் அதிகப்படியாக உட்கொள்ளும் வறுத்த உணவுகள் தான்.

அலபாமா பல்கலைகழகம்
அமெரிக்காவில் இருக்கும் அலபாமா பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ், மக்கள் துரிதமாக இந்த உணவு பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும். அவர்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது இப்போது கட்டாய நிலையாக உள்ளது என கூறியுள்ளார்.

சிறுநீரக நோய்கள்
வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் நோய்கள் 50% அதிகம் ஏற்படுகிறதாம். இது மட்டுமில்லாமல், சிறுநீரக பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் 50% மக்கள் அதிகம் வறுத்த உணவு உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

நாட்களை குறைத்துக் கொள்ளுங்கள்
சிலர் ஒருநாள் கூட வறுத்த உணவுகள் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். இவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என மெல்ல, மெல்ல வறுத்த உணவு சாப்பிடும் பழக்கத்தை கைவிட முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க செய்கிறது
வறுத்த உணவு அதிகம் சாப்பிடுவதால், நமது உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. இதன் காரணத்தால், உடல்பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு இதய பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

சோடா பானங்கள்
வறுத்த உணவுகளுக்கு இனியாக உடல் நலத்தை சீரழிக்கிறது சோடா பானங்கள். உடல் பருமன் அதிகரிக்க இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

கோலா பானங்கள்
சமீபத்தில், கோக், மற்றும் கோக் டயட் சோடா குடிப்பதால் தான் அமெரிக்காவில் ஏராளமானோர் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என ஓர் தகவல் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

சைனீஸ், பிட்சா, பர்கர் வேண்டாம்
சமீப வருடங்களில் நாம் சைனீஸ், பிட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்கிறோம். இதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள். முடிந்த வரை காய்கறி, பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.13 1439445494 9eatingfriedfoodwasheddownyourhealth

Related posts

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பையே நொடியில் அடித்து விரட்டும் அற்புத சூப்!அற்புதமான எளிய தீர்வு

nathan

நீரிழிவு நோயாளிகள் சிவப்பு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…

nathan

லாலி பாப் சிக்கன்

nathan

பழச்சாறுகளை விட பழங்கள் ஏன் சிறந்தது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வயிற்றில் நார்த்திசுக்கட்டி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

முதல் முறை பெற்றோர் ஆக போறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

நலம் வாழ உணவுகளில் தவிர்க்க வேண்டியவை எவை?

nathan

நோயே வரக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா? இந்த சிறு கனியை சாப்பிடுங்க!!

nathan