23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
14 1439523129 4 1healthytipsforstrongbones
ஆரோக்கியம் குறிப்புகள்

எலும்பின் வலிமையை அதிகரிக்க எளிய ஆரோக்கிய டிப்ஸ்!!!

முன்பு எழுவது வயது முதியவர் கூறிய உடல்நல குறைகளை எல்லாம் இன்று முப்பது வயதிற்கும் குறைவான இளம் ஆண்கள் கூறுகின்றனர். இதற்கு, உணவுப் பழக்கத்தின் மாற்றம் , சரியான உடற்பயிற்சி இல்லை என காரணங்களை அடுக்கிக் கொண்டே சென்று என்ன பயன்?

இதற்கான தீர்வு என்ன என்பதை அறிந்து, அதை பின்பற்றுவது தான் நாம் செய்ய வேண்டிய வேலை. எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானவை கால்சியம் ஊட்டச்சத்தும் மற்றும் சரியான உடல் வேலை.

நான் புத்திசாலி உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடித்துவிடுவேன் என்பவர்களுக்கு தான் அதிகமான எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன. எனவே, இதிலிருந்து விடுபட்டு வெளிவர நாம் என்ன செய்ய வேண்டும்……

அதிகாலை சூரிய உதயம் சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது என கூறுகிறார்கள்.

பூண்டு மற்றும் வெங்காயம் உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.

அதிகப்படியான புரதம் வேண்டாம் இறைச்சி உணவுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அதிகப்படியான புரதம், கால்சியம் சத்தை வெளியேற்றிவிடுகிறது. இது, எலும்பின் வலிமை குறைய காரணமாகிறது. எனவே, புரதம் அதிகமுள்ள இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.

அளவான டீ, காபி சிலர் ஓர் நாளுக்கு பல முறை டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது, எலும்பின் வலிமைக்கு நல்லதல்ல. எனவே, இவற்றின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால், இதற்கு மாற்றாக பால் குடிக்கலாம்.

உடற்பயிற்சி அவசியம் எலும்பின் வலிமை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நடைப்பயிற்சி, ஜாக்கிங், சிட்-அப்ஸ் அல்லது உங்கள் மாடி படிகளை அரை மணிநேரம் ஏறி, இறங்கினால் கூட போதும்.

உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் ஃபுட் பால், பாஸ்கெட்பால், பேட்-மிட்டன் என எந்த விளையாட்டு உங்களுக்கு பிடிக்கிறதோ அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுங்கள். இது, தசை மற்றும் எலும்பின் வலிமை அதிகரிக்க உதவும்.

சோடா மற்றும் கோலா பானங்கள் சோடா மற்றும் கோலா பானங்களில் உங்கள் பல்லை போட்டால் கரைந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இவற்றில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் சத்தை போக்கிவிடுகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் எலும்பு சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது.

பால் உணவுகள் அவசியம் பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.

ஆரோக்கியமான உணவு உங்களது உணவுப் பழக்கத்தில், கீரை, தானிய உணவுகள் போன்ற சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.

புகை, மது காலம், காலமாக நாம் கூறுவது தான். புகை மற்றும் மதுவை விட்டொழித்துவிடுங்கள். குறைந்த பட்சம், முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.

14 1439523129 4 1healthytipsforstrongbones

Related posts

பெண்களே இந்த 9 கண்ணுல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தின இரகசியம் நாங்க சொல்றோம்!

nathan

தெரிஞ்சிக்கோங்க.! தானே பேசிக்கொள்பவரா நீங்கள்?

nathan

மட்பாண்டங்களை வைத்து சமைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டா?

nathan

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்

nathan

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் டைகர் நட்ஸ் பற்றி தெரியுமா ?

nathan

பெற்றோர்களே! உங்க குழந்தைங்க எவ்வளவு நேரம் தூங்குறாங்க? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கண்ணீரால் கரையும் தீமைகள்

nathan

வியாழக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க…

nathan

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan