28.6 C
Chennai
Monday, May 20, 2024
e7
ஆரோக்கிய உணவு

பூண்டு லேகியம்-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

பூண்டு லேகியம்

தேவையானவை:

உரித்த பூண்டு – 200 கிராம்
துருவிய தேங்காய் – ஒன்று (அரைத்து பால் எடுத்து வைக்கவும்)
கருப்பட்டி – கால் கிலோ
இஞ்சி – 75 கிராம்
கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு
நல்லெண்ணெய் – 200 மில்லி
பசு நெய் – 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல் நீக்கி நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு தெளிந்த இஞ்சிச் சாற்றை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். கருப்பட்டியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து உரித்த பூண்டு, பெருங்காயம், தெளிந்த இஞ்சிச் சாறு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால், கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பூண்டு-கருப்பட்டிக் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள கிளறவும். இத்துடன் பசு நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கி ஆறவிட்டு, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை மாதம் வரை  வைத்துக்கொள்ளலாம். இதை இரண்டு நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.

குறிப்பு:

இஞ்சியை அரைத்து வடிகட்டும் போது, மேலாக தெளிவாக இருக்கும் சாற்றை மட்டும் எடுக்கவும். அடியில் வெள்ளை நிறத்தில் தங்கியிருக்கும் துகள்களை கொட்டி விடவும். லேகியம் கிண்டும் கரண்டியில் துளியும் ஈரம் இருக்கக் கூடாது. பரிமாறும்போது ஒரு முறை சூடாக்கி, பிறகு பரிமாறவும். இது வாய்வுத் தொல்லையை அறவே நீக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும், உபயோகப்படுத்தும் முன், ஒரு முறை நன்கு சூடுப்படுத்தி பிறகு உபயோகப்படுத்தவும்.

e7

Related posts

உங்களுக்கு தெரியுமா? சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…தொப்பையை கரைக்க மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த காய் சிறந்தது

nathan

வெளிநாட்டினரையும் வாயடைக்க வைக்கும் பழைய சோறு… அப்படியென்ன இதுல இருக்குது

nathan

தர்பூசணி சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் தண்ணி குடிக்க கூடாது?

nathan

சமைக்கலாம் வாங்க!–முட்டை தக்காளி குழம்பு

nathan

சூப்பர் டிப்ஸ் ! உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினம் பாதாம் உண்ணுங்கள்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால்..!!ஐஸ்வர்யம் பெருகுமாம்

nathan

சமையல் எண்ணெய் தேர்வு செய்யும் போது கவனம் தேவை

nathan