மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றிய 10 ஆச்சரியமான விஷயங்கள்!!

இவ்வுலகில் ஒவ்வொரு நொடியிலும் ஏராளமான குழந்தைகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன. தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை ஒவ்வொரு தாயாலும் சொல்லி மாளாது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில அரிய உண்மைகளைப் பற்றி ஒரு பெற்றோராக நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். பிறந்த குழந்தைகள் குறித்து இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என்று நம் கண்கள் தானாக விரியும்!

அப்படிப்பட்ட சில ஆச்சரியமான சில உண்மைகள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

‘வெயிட்’டான மே குழந்தைகள்!

பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்குமாம்!

தாயின் வாசனை!

பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்குமாம்! அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளுமாம்!

நோ முழங்கால் சில்லு!

நம் முழங்கால்களில் சாதாரணமாக இருக்கும் கெட்டியான சில்லுகள், பிறந்த குழந்தையிடம் இருக்காதாம்!

கருவில் கேட்கும் திறன்!

தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியுமாம்! நல்ல விஷயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விஷயங்களாகும்![penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உப்புச் சப்பில்லாமல்…!

பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாதாம்! இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்.

அகச் செவி மட்டுமே!

பிறந்த குழந்தையிடம் உள்ள உணர்வுள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்குமாம்!

பு(பொ)ன்னகை!

இவ்வுலகில், பிறந்ததும் தன் பெற்றோரைப் பார்த்துப் புன்னகை புரியக் கூடிய ஒரே உயிரினம் என்றால் அது மனிதர்களாகிய நாம் தான்!

ஒரே நேரத்தில் மூச்சு விடு, விழுங்கு!

பிறந்து ஏழு ஆண்டுகள் ஆகும் வரை, ஒரு குழந்தையால் ஒரே நேரத்தில் மூச்சு விடவும் விழுங்கவும் முடியுமாம்!

இயற்கை நீச்சல் வீரர்கள்!

பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்கி ‘தம்’ கட்ட முடியுமாம்! சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது! வயதாக ஆக இத்திறமைகள் வேகமாக மறைந்து விடுகின்றன, புதிதாகக் கற்றுக் கொள்ளும் வரை.

300 எலும்புகள்!

ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் 300 எலும்புகள் இருக்குமாம்! சாதாரணமாக, வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும். வயதாக ஆக சில எலும்புகள் இணைந்து 300 ஆக இருந்தது 206 ஆகி விடுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button