28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
e4
ஆரோக்கிய உணவு

மருந்துச் சோறு-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

பூண்டு, இஞ்சி, மஞ்சள் என நம் உணவே ஆரோக்கியமும் மருத்துவக் குணங்களும் நிரம்பியதுதான். உங்களுக்காக இங்கே மருத்துவக் குணம் நிரம்பிய ஸ்பெஷல் ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா செய்யது.

e4

மருந்துச் சோறு

தேவையானவை:

புழுங்கல் அரிசி – இரண்டரை கப்
கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மட்டிப் பட்டை – ஒரு அங்குல துண்டு
சதக்குப்பை – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 4 கப்

e5

செய்முறை:

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துப் பிழிந்து பால் எடுத்து தனியாக வைக்கவும். கசகசாவை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். மட்டிப் பட்டை மற்றும் சதக்குப்பையை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில், எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், 4 கப் தண்ணீர், உப்பு, பொடித்த மட்டிப் பட்டை சதக்குப்பை, அரைத்த கசகசா விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். ஓரங்களில் நுரை கட்டியதும், கழுவிய அரிசியைச் சேர்த்து கலக்கி வேகவிடவும். சாதம் வெந்ததும் சூடாக கருவாட்டுக் குழம்பு, கறிக்குழம்பு அல்லது நாட்டுக் கோழிக் குழம்புடன் பரிமாறவும்.

குறிப்பு:

வாரம் ஒரு முறை மருந்துச் சோற்றை உட்கொண்டால், உடல் வலி பறந்துவிடும். நாட்டு மருந்துக் கடைகளில் மட்டிப் பட்டை என்று கேட்டால் கொடுப்பார்கள். மசாலா உணவுகளை சமைக்கப் பயன்படுத்தும் பட்டையை இதற்கு உபயோகிக்கக் கூடாது

Related posts

சுவையான பச்சை பட்டாணி சட்னி

nathan

சூப்பர் டிப்ஸ்.. மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும் எள் தாவரம்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெங்காயத்தை அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

nathan

இந்த ஒரு பொருள சேர்க்காததால தான் புற்றுநோய் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காளானை இவர்கள் சாப்பிடவே கூடாது ஏன் தெரியுமா…?

nathan

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

nathan

ஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழை

nathan

உங்களுக்கு தெரியுமா நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான 10 காரணங்கள்!

nathan

பூண்டுப் பால்! weight loss tips

nathan