ஆரோக்கிய உணவு

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம் -தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்
நரம்பு மண்டலத்தையும், தசைகளையும் பாதித்து, மனிதனின் அன்றாடச் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோய்க்கு எ மயோட்ரோபிக் ஸ்கிளீரோஸிஸ் என்று பெயர்.

இது முதலில் ஒரு பேஸ்பால் விளையாட்டு வீரருக்கு வந்தது. இந்த நோயை மோட்டார் நீயூரான் டிசீஸ் என்றும் குறிப்பிடுவார்கள். இந்த நோயால் நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து, இறுதியில் மரணம் ஏற்படும். இந்த நோய்க்கான காரணம், மருத்துவர்களுக்கும் விளங்காத புதிர். சில நோயாளிகளுக்கு மரபு சார்ந்த பிரச்சினைகளால் இந்நோய் வருவதாகத் தெரிகிறது.

நோயின் தன்மைகள்

தசைத் துடிப்பு, பலவீனம் போன்றவை நோயின் முக்கிய அறி குறிகள். படிப்படியாகப் பேச்சு குழறும். நாளாக நாளாகத் தசைகளை அசைப்பதற்கும், பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும், மூச்சுவிடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இந்நோய்க்கு இன்னும் மருந்து இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. நோய் அதிகரிக்க அதிகரிக்க நடப்பதில் சிரமம், தினசரிச் செயல்பாடுகளைச் செய்வதற்குச் சிரமம், கால்களில் பலவீனம், மூட்டுகளில் பலவீனம், கை சோர்வு, பேச்சு உளறுதல், விழுங்குவதில் தடை, தசைப் பிடிப்பு, கைகளில், நாக்குகளில் தசைத் துடிப்பு, தலையை நிமிர்த்தி வைத்து இருப்பதில் சிரமம் போன்றவை காணப்படும்.

நோயானது கைகளில், கால்களில், பாதங்களில் தொடங்கிப் பின்பு மற்றப் பகுதிகளைப் பாதிக்கலாம். மென்று சாப்பிடுதல், சுவைத்தல், மூச்சு விடுதல் போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். மூத்திரப் பையையோ, மலப்பாதையையோ இது பாதிப்பது இல்லை. அறிவுக்கான ஆற்றலையும் பாதிப்பது இல்லை.
தசைகள் அழியும் நிலை ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு குளுட்டாமேட் என்னும் புரதம் அதிகமாக இருக்கிறதா என்றும், இவை நரம்பு மண்டலத்துக்கு நச்சுத் தன்மை அளிப்பவையா என்றும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. சில மாறுபட்ட கோணங்களில் புரதம் படிவதும் இந்நோய்க்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்போது அதற்குச் சில உபகரணங்கள் பயன்படுத்த வேண்டி வரும். இரவு தூங்குவதற்கும் உபகரணங்கள் தேவைப்படும். கழுத்தின் முன்பகுதியில் ஒரு துளையிட்டு, அதன் மூலம் சுவாசிக்க வைப்பார்கள். நோய் தீவிரமாகும் போது, இந்த நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிப்பார்கள்.

நோய் தொடங்கி 5 வருடங்களுக்குப் பின் சிரமங்கள் ஏற்படலாம். நாளாக நாளாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது புரியாது. உணவை விழுங்க முடியாது. இதனால் ஊட்டச்சத்து குறையும், சில சமயம் உணவு நுரையீரலுக்குள் சென்று விடும், அதனால் நிமோனியா வந்துவிடும். அபூர்வமாக ஒரு சிலருக்கு நினைவுத் திறன், தீர்மானங்கள் எடுப்பது போன்றவற்றில் பாதிப்பு வரலாம்.

இதைச் சரியாகப் பரிசோதிக்கக் கூடியவர்கள், நரம்பியல் நிபுணர்களே. நோய் அறிகுறிகள் தொடங்கியது எப்போது, எவ்வாறு உள்ளது என்பதை நோயாளிகள் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. மனம், உடல், ஆத்மா ஆகியவற்றை முழுமையாக ஒன்று சேர்த்துப் பார்க்கிற, ஒரு நரம்பியல் நிபுணர் கிடைத்தால் நல்லது.மருந்து இல்லை என்று சொல்லி விட்டுப் போவதைவிட கருணையுடன் பார்க்கிற மருத்துவர் தேவை.

ஆயுர்வேத மருத்துவரும், நரம்பியல் நிபுணரும் இணைந்து செயல்படும்போது, இது போன்ற நோய்களை எதிர்ப்பதில் பலன் சற்று அதிகம் கிடைக்கும். தசைத் துடிப்பு, தசையின் சக்தி போன்றவற்றை எல்லாம் பார்ப்பார்கள். எலக்ட்ரோ மயோகிராம் என்று சொல்லக் கூடிய பரிசோதனையில் மருத்துவர் தோல் வழியாகத் தசைகளில் ஊசியைக் குத்தி, அதன் மின்சார அதிர்வுகளைப் பதிவு செய்வார். அதைப்போல நெர்வ்கன்டக்ஷன் ஸ்டடி என்ற ஆய்வு உண்டு. சில நேரங்களில் எம்.ஆர்.ஐ. எடுப்பார்கள். தசை பயோஸ்பி செய்வதும் உண்டு. இந்நோய்க்குப் பன்முகத்தன்மை கொண்ட மருத்துவக் குழுவைக் கொண்டு சிகிச்சை செய்வது நலம்.

ஆயுர்வேத சிகிச்சை

இந்த நோய்க்கு மாம்ஸ க்ஷயம், தாதுக்ஷயம் என்று பெயர். இங்கு அக்னி சக்தியை வலுப்படுத்தித் தாதுகளுக்கு, திசுக்களுக்கு வலிமையைத் தரும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பால் முதப்பன் கிழங்கு, பூரணச் சந்திரோதயம், குறுந்தட்டிவேர் போன்றவை சிறந்த தாகும். ஓரிதழ் தாமரை பால் கஷாயம் இதற்கு ஒரு சிறந்த மருந்து. எண்ணெய் தேய்த்தல், நவரை லேபம் செய்தல், சிரோவஸ்தி செய்தல், பால் கஷாயங்களை வஸ்தியாக (எனி மாவாக) கொடுத்தல், சியவன பிராசலேகியம், நெல்லிக்காய் லேகியம், கூஷ்மாண்ட லேகியம் போன்றவை நோயின் வேகத்தைச் சற்றுக் கட்டுப்படுத்தும்.

ஆயுர் வேதத்தில், ஸ்வர்ண பஸ்மம் இதற்கு ஒரு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. பாலில் அமுக்குரா சூரணம் 10 கிராம் கலந்து, இரண்டு வேளை கொடுக்கலாம்.
க்ஷய குலாந்தக ரஸம் என்று சித்த மருத்துவத்தில் உள்ளது. அது இதற்கு ஒரு உன்னத மருந்தாகும்.

முருங்கை பிசின், நெருஞ்சி முள் மருந்து நீர்முள்ளி விதை, ஜாதிக்காய், முருங்கைப் பிசின், முருங்கை விதை, நெருஞ்சிமுள், நிலப்பனைக்கிழங்கு, சாலாப்மிச்ரி, தாமரை விதை, ஏலம், குதிரைக்கட்டை, பட்டுக்கொடி, கன்மதம், மதனகாமப்பூ, திராட்சை, எள்ளு, பூமிச் சர்க்கரை, பருத்திக்கொட்டை போன்றவற்றால் செய்த மருந்துகளைச் சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கலாம். இது நோயின் வேகத்தைச் சற்றுக் குறைக்கும்.

மஞ்சள், சிறிதளவு வசம்பு, கொட்டம், திப்பிலி ஆகியவற்றை அண்டத் தைலத்துடன் சேர்த்து நாக்கில் தடவ, பேச்சில் தெளிவு ஏற்படலாம். இவர்களுக்கு மனோ தைரியமும், நல்ல சுற்றுச்சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சித்த மருத்துவத்தில் சில மருந்துகள் இதற்கு நல்ல பலனளிக்கின்றன.

Related posts

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை அடிக்கடி வாங்குபவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

சர்க்கரை நோய் மற்றும் பெண் மலட்டு தன்மையை போக்கும் நாவல் பழம்

nathan

உணவில் கேரட்டை அதிகளவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்

nathan

மிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள்

nathan

சுண்டல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பீதியைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி நிஜம் என்ன?

nathan

சூப்பர் டிப்ஸ் மூலநோயை அடியோடு விரட்டலாம்! வீட்டிலேயே மருந்து இருக்கே!

nathan

சுவையான கேரட் பச்சை பட்டாணி சாலட்

nathan