201606271212415535 nutritious Curry leaves chutney SECVPF
சட்னி வகைகள்

சத்தான கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது சத்தான கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்தான கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1 துண்டு (துருவியது)
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
புளி – கோலி குண்டு அளவு
கடுகு – 3/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்த பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னி கலவையில் ஊற்றி கலக்கவும்.

* சூப்பரான சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி!!!201606271212415535 nutritious Curry leaves chutney SECVPF

Related posts

காலிஃபிளவர் சட்னி

nathan

சுவையான தேங்காய் சட்னி வீட்டிலேயே செய்யலாம்….

nathan

சுவையான செலரி சட்னி

nathan

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

பச்சை மிளகாய் வெங்காய சட்னி

nathan

சுவையான வெண்டைக்காய் சட்னி தயார்

nathan

சூப்பரான கடலைப்பருப்பு தேங்காய் சட்னி

nathan

தக்காளி சட்னி

nathan

சுவையான கேரட் சட்னி

nathan