1467962156 2551
​பொதுவானவை

நண்டு ரசம்

தேவையான பொருட்கள்:

நண்டு – 10
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 1
ரசப் பொடி – 3 தேக்கரண்டி
தக்காளி – 1 பெரியது
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத் தூள் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு, எண்ணெய் – தாளிக்க


செய்முறை:

நண்டை நன்கு சுத்தம் செய்து அம்மியில் வைத்து அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதனை வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

புளிக் கரைசலில், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தட்டி வைத்திருக்கும் நண்டை ஓடுகள் இல்லாத அளவுக்கு அதனை வடிக்கட்டி கொள்ளவும்.

அடுப்பில் வானலி வைத்து அதில் எண்ணெய் விட்டு நன்றாகக் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் புளிக்கரைசலை சேர்க்கவும்.

தாளித்த நண்டு ரசம் பச்சை வாசனைப் போக நன்கு கொதித்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை தழைகளைப் போட்டு இறக்கவும்.

சுவையான நண்டு ரசம் தயார். இதனை சூடாக இருக்கும்போதே அப்படியே குடிக்கலாம். அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சளி பிடித்துருப்பவர்களுக்கு இதனை கொடுத்தால் சளி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.1467962156 2551

Related posts

சாம்பார் பொடி செய்வது எப்படி

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

ஆப்பிள் ரசம்

nathan

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?

nathan

சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்

nathan

வெங்காய வடகம்

nathan

உங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்

nathan

கிராமத்து கருவாட்டு தொக்கு

nathan