25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

SLIM-267x200

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.
உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.

பெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.
குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும்.

LfFMM7bJFfM

Related posts

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

nathan

உங்க வாய் துர்நாற்றத்தை நீக்க உடனடியாக இதை முயன்று பாருங்கள்…

nathan

7 நாட்களில் அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அற்புத முறை!

nathan

வியர்வை நாற்றம் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க சிறந்த வழிகள் இதோ….

sangika

22-27 வயது ஆணா நீங்கள்?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை தோல் வேகவைத்த நீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!!

nathan

2 நிமிடம் காலில் இந்த இடத்தில் அழுத்துங்கள்: பல பிரச்சனைகள் குணமாகும்

nathan

உடல் எடையை குறைக்க இதை குடிங்க!….

sangika

காலில் கருப்பு கயிறு அணிபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan