அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு கிடுகிடுவென உயருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்
இது மன அழுத்தத்தின் காரணிகளான, சோர்வு, தூக்கமின்மை, உடல் பருமன் ஆகியவற்றை தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு பதிலாக முழு தானியங்களையும், பழங்கள், காய்கறிகளையும் உணவில் அதிகமாக சேர்க்கும்படி ஆய்வாளர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பழங்களை சாறு செய்வதும், அரிசியை வெள்ளையாக்குவதும், அதன் முக்கியச் சத்துக்களை வெளியே சிதறடித்து விட்டு பிரயோஜனம் இல்லாத உணவாக உண்பது நாம் கடைப்பிடித்து வரும் தவறான பழக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Related posts
பப்பாளி காய் உடல் கொழுப்பை வேகமாக குறைக்கலாம், பப்பாளிப் பழத்தை விட பப்பாளி காயில் சுறுசுறுப்பை கொடுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும் என்சைம்கள் உள்ளன…
உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட்டுக்கொண்டே எடையை ஈஸியாக குறைக்க உதவும் தந்திரங்கள்…!தெரிந்துகொள்வோமா?
Click to comment