மருத்துவ குறிப்பு

கர்ப்பமாவதற்கு முன் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள் !தெரிஞ்சிக்கங்க…

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கைமுறை, உடல் பருமன் அல்லது மரபு ரீதியான கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளது. நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், வருங்காலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படவுள்ள சிக்கல்களை தவிர்க்க, உங்கள் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அதனால் கருத்தரிப்பதற்கு முன்பாக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சோதனைகளை பற்றி தெரிந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும்.

• தைராய்டடு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதனை ஹைப்பர் தைராய்டிசம் என அழைப்பார்கள். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். குறைவாக சுரப்பதை தைராய்டு சுரப்பு குறை என கூறுவார்கள். இதனால் பிறக்க போகும் குழந்தைக்கு மூளை கோளாறுகள் ஏற்படலாம். கருத்தரிப்பதற்கு முன்பாக என்ன சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரிடம் கேட்டால், கண்டிப்பாக அந்த பட்டியலில் தைராய்டு சோதனை இடம் பெறும்.

• கருத்தரிப்பதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முக்கியமான சோதனைகளில் பொதுவாக இரத்த சோதனை முதல் இடத்தை பிடிக்கும். இரத்த சோதனைகள் உங்கள் இரத்த எண்ணிக்கையை முழுமையாகவும் சிஃபிலிஸ், எச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி போன்ற பல்வேறு நோய்களையும் சோதிக்க உதவும். இரத்த சோகை மற்றும் ஃபைப்ரோஸிஸ் கட்டி போன்ற மரபு ரீதியான நோய்களை சோதிக்கவும் இது உதவும்.

• இரத்தத்தில் அதிக சர்க்கரை, அதிக புரதம் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று போன்ற பாக்டீரிய தொற்றுக்கள் இல்லை என்பதை உறுதி செய்ய சிறுநீர் சோதனைகள் எடுக்கப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பாக நீங்கள் நீரிழிவு நோய் மருத்துவரை சந்திக்க வேண்டும். சிறுநீர் பாதையில் தொற்று என்றால் அளவுக்கு அதிகமாக நீராகாரம் மற்றும் ஆன்டி-பையாடிக்ஸை குடிக்கவும்.

• பெண்ணுறுப்பு, கருப்பை வாய் மற்றும் இடுப்பு பகுதிகளில் உயிரணு ஓட்ட சோதனைகள் மற்றும் முழுமையான உடல் பரிசோதனைகள் எடுக்க பொதுவாகவே பரிந்துரைக்கப்படும். கருத்தரிப்பதற்கு முன்பு இந்த சோதனைகளை மேற்கொண்டால் கர்ப்ப காலத்தில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். உங்கள் பெண்ணுறுப்பு அல்லது கருப்பை வாயில் ஏதேனும் பூஞ்சை தொற்றுக்கள் அல்லது செல்லுலார் குறைபாடுகள் இருந்தால், உயிரணு ஓட்டல் சோதனைகள் அவற்றை வெளிப்படுத்தும்.

• ருபெல்லா போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் மூலமாக, பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவுகள் போன்றவற்றை தவிர்க்கலாம். அதனால் கருத்தரிப்பதற்கு முன்பாக மருத்துவரின் அறிவுறுரையின் படி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
620487b4 7a05 4f9b a479 856f2103010c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button