27.1 C
Chennai
Wednesday, Aug 13, 2025
knJecm2
ஐஸ்க்ரீம் வகைகள்

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

என்னென்ன தேவை?

பால் – ½ லிட்டர்
முட்டையின் மஞ்சள் கரு – 4
சர்க்கரை – 1 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
ஜெல்லி கிரிஸ்டல் – 1 பாக்கெட்


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்க விடவும். 4 முட்டைகளின் மஞ்சள் கருவை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது முட்டையின் மஞ்சள் கரு மீது பாலை ஊற்றி கலக்கி அதை திரும்ப அடுப்பில் வைக்கவும். அவற்றை நன்றாக கொதிக்க விடவும். பின் அதை எடுத்து ஃப்ரிசரில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து ஜாரில் போட்டு நன்றாக மசித்து பின் திரும்ப அவற்றை ஃப்ரிசரில் வைக்கவும்.

இப்போது ஒரு கிண்ணத்தில் ஜெல்லி கிரிஸ்டல்களை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் அவற்றை உங்களுக்கு தேவையான அச்சில் ஊற்றி வடிவம் பெறவும். ஃப்ரிசரில் இருந்து ஐஸ் கிரீம்யை எடுத்து ஜெல்லி உடன் பரிமாறவும். வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி தயார்.knJecm2

Related posts

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

மாம்பழ குச்சி ஐஸ்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

nathan

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

nathan